இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏதேன் தோட்டத்தில் என்னமாய் இருந்தான்! சொர்க்கத்தின் அரவணைப்பில் சுகத்தைப் பகிர்ந்து கொண்ட சுந்தரக்கனவு கண்ட அற்புத ஜோடியை ஆதாம் ஏவாளை ஆட்டி வைத்ததொரு பாம்பு.... சபலத்தை ஊட்டி சஞ்சலத்தை உண்டாக்கி வீழவைத்த தொரு பாம்பு.... அந்த நாளிருந்தே அந்தோ பாவம், மனிதன் விழுகிறான்... நிமிர்கிறான் எழுகிறான் எழுந்து பின் விழுகிறான்... நாளும் பொழுதும் நடக்கும் இந் நாடகத்தைப் பார்த்துச் சிரிக்கும் பரிகசிக்கும் பாம்பு O பாம்பு விஷம் கக்கும் ஆனாலும் அதே விஷமே விஷத்துக்கு மருந்தாகும் விந்தையினைக் காண்கிறோம்; ஏறுகின்ற விஷத்த்ை இறக்குகிறோம், அதே விஷத்தால்! 50 0 மீரா