பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தவேர் 1864-ஆம் ஆண்டில் ஜான் புரூஸ் நார்ட்டன் லட்சுமி நரசிம்முலு பெற்ற சிறப்புக்களைப் போற்றிப் புகழ்வதை வரலாற்றில் காண்கிறோம். காலஞ்செல்லச்செல்ல லட்சுமி நரசிம்முலுவின் அரசியல் பொது நலத் தொண்டு விரிவடையலாயிற்று. மைசூரைப்பற்றி அவர் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திப்புவோடு வெள்ளையர்கள் நிககழ்த்திய போரின் போது வெள்ளை அரசாங்கம் ஹைதராபாது நைசாமோடு திரை மறைவில் பல உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. அந்த உடன்படிக்கைளின் நோக்கம் நாம் கதைகளில் படிக்கின்ற குரங்கைப்போல நீதிபதியாய் நின்று, மைசூரை அக்த நாட்டு அரச குடும்பத்தினின்றும் பறித்து, திப்புவுக்கு விரோதமாகத் தங்களுக்குத் துணை புரிந்த நைசாமுக்குத் தருவதாக நடித்து, நய வஞ்சகம் புரிவதே ஆகும். இதை உணர்ந்த திரு. லட்சுமி நரசிம்முலுவின் தொண்டுள்ளம் ஓய்ந்து ஒடுங்கிப் போக ஒப்பவில்லை. சென்னையிலிருந்த திரு. லட்சுமி நரசிம்முலு மைசூருக்கும் ஹைதராபாதிற்கும் சிட்டாய்ப் பறந்தார்; கிருஷ்ணராஜ உடையாரைக் கண்டு, ஒர் இளைஞனைத் தத்துப் பிள்ளையாக எடுத்து மைசூரை வெள்ளேயர் கையில் சிக்கா வண்ணம் காப்பாற்ற யோசனை கூறினர்; அவ்வாறே ஹைதராபாதின் புகழ் வாய்ந்த சர். சாலர்சன்" என்ற அமைச்சரைக் கண்டு திரை மறைவில் கடந்த உடன்படிக்கைப்படி திப்புவுக்கு எதிராக வெள்ளையருக்கு உதவி புரிந்ததற்காக (மைசூர் மன்னருக்கு வாரிசு ஏற்படாவிடில்) ஹைதராபாதிற்குச் சேரவேண்டிய உடைமைகளெல்லாம் கோட்டை விட்டுவிடாமல் இருக்கும்படி