உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இனி, கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்ருண்டின தாய்க் கருதப்படும் பெருங்கதையுள் வாசவதத்தை யின் திருமணத்தில் (1) எரி வளர்த்தல் (2) அம்மி மிதித்தல் (3) பொரி கட்டுதல் (4) முன்கை பற்றி வலம் வருதல் (5) அந்தனர் ஆசி கூறுதல் (6) அருந்ததி காட்டுதல் (7) பெரியோர் வாழ்த்தல் ஆகியன கூறப்பட்டுள்ளன. பெருங்கதைக்குப் பின்னல் திருமணச் சடங்கு களைப் பற்றிய விரிவான விவரங்களைக் கூறுவது கி.பி. 8-ஆம் நூற்ருண்டைச் சார்ந்த ஆண்டாளின் அருள்வாக்கே. அவர்தம் நாச்சியார் திருமொழி யால் அறியத்தக்க குறிப்புகள் வருமாறு : 1. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வங்து மகள் பேசுதல். 2. மணமகள் புத்தாடை உடுத்தல்.’ 3. திருமாலின் தங்கையான சுந்தரி (துர்க்கை) மணமகளுக்கு மனமாலை சூட்டல்.’ 4. மணமகளுக்குக் காப்புகாண் கட்டுதல்." 5. மணமகள் மணப்பங்தலுக்கு வருதல்." .ே இசைக்கருவிகள் முழங்கக் க ண் ண ன் ஆண்டாள் கையைப் பிடித்தல். (இதுவே திரு மணத்திற்கு அறிகுறியாயிற்று எனலாம்.) 7. வேதியர் மந்திரம் ஒதக் கண்ணன் ஆண் டாள் கையைப் பற்றித் தீவலம் செய்தல்.