உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? தது. சிறைக்கூடமே திருமண மண்டபம் மண மகன் கைதி மணமகள் வீட்டிலிருந்து வந்து சடங்கு முடிந்ததும் திரும்பிப் போய்விட்டாள் : ஆயினும், திருமணம் சிறப்பாக கடந்ததாகவே திருமணப் பெண்ணின் எண்ணம். ஏனென்றல், ஐரிஷ் பாதிரியார் ஒருவர், ஐரிஷ் மொழியிலேயே திருமணச் சடங்கை நிறைவேற்றியதாக அங்த அம்மையார் பிற்காலத்தில் எ க்க ளி ப் போ டு பேசினர் ! அயர் காட்டு வீர மணமக்களின் மொழிப்பற்று நமக்கும் வேண்டாமோ ? மனயறமும் தமிழ் மறையும் இனி, தமிழ்நாட்டுத் திருமண மக்கள் தவருது மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடு ஒன்றுண்டு. அது பொதுமறையும் தமிழ் மறையுமாகிய திருக் குறள் வழி கின்று வாழ்வு கடாத்த உறுதிகொள்ள வேண்டும் என்பதே. வையகம் முழுவதற்கும் - வாழ்க்கை முழுவதற்கும் பயன் தரத்தக்க ஒரே நூல் தெய்வப் புலவர் நம் தாய்மொழியில் தந்த திருக்குறளே ஆகும். எவரொருவர் உள்ளத்தில் அத் தெய்வத் திருநூலில் உள்ள ஒவ்வொரு திருக் குறள் மணியும் நிலையமாக கின்று ஒளிவீசிக் கொண்டிருக்கிறதோ அவர்க்கு எல்லா கலன்களும் இம்மையிலும் மறுமையிலும் எளிதில் வாய்க்கும் ; அன்பு பெருகும்; அறிவு பெருகும்; கல்வி பெருகும்; கேள்வி பெருகும்; செல்வம் பெருகும்; புகழ் பெரு கும்; கடவுள் அருளும் பெருகும்.