பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

கொண்டிருந்த நேரம்.அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்திலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த "சண்ட மாருதம்' என்ற பத்திரிகையில் மாதம் முப்பது ரூபாய்ச் சம்பளத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந் தேன். எதிர்காலக் கனவுகள் ஏக்கங்களாக என் கண் களில் தேங்கியிருந்தன.பாவேந்தர் அப்போது புகழேணி யின் உச்சியில் இருந்தார். அப்போது அவருடைய சிறிய அசைவுகளும் எனக்கு வரலாறாகப்பட்டன. நினைவில் நின்ற ஓரிரு நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன்.

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதியை மாடர்ன் தியோட்டர்ஸ் திரைப்படமாக உருவாக்கிக் கொண்டிருந்தனர். பாவேந்தர் அதற்குப்பாட்டும் வசன மும் எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய பாடல் களுக்கு தட்சணாமூர்த்தி இசையமைத்துக் கொண் டிருந்தார்.

கமழ்ந்திடும் பூவிலெல்லாம்

தேனருவி கண்டதனால்

வண்டு காதலினால்-நாதா

தாவிடுதே இன்பம் மேவிடுதே

என்ற பாடலுக்கு ரெகார்டிங் நடந்து கொண்டிருந் தது. கமழ்ந்திடும்' என்ற சொல் உச்சரிப்பு கடினமாக இருந்தது. இன்னும் எளிய சொல்லாக இருந்தால் ரெக்கார்டிங்கில் அது தெளிவாக இருக்கும் என்று இசையமைப்பாளர் கருதினார். உடனே அங்கிருந்த பரவேந்தரை அணுகிக் கமழ்ந்திடும்’ என்ற சொல் ரெகார்டிங்கில் தெளிவாக இல்லை. அதை மாற்றி இன்னும் எளிமையான சொல்லொன்றைப் போட்டுக் கொடுங்கள்” என்று கேட்டார்கள். அதற்குப் பாவேந்தர் வாயிடுக்கில் சிகரெட்டை இடுக்கிய வண்ணம், அதெல் லாம் மாத்த முடியாது. ரெக்கார்டிங் தெளிவா இல் லைன்னா சுந்தரத்துக்கிட்ட சொல்லி ரெகார்டிங் மெஷினை மாத்தச் சொல்லு!’ என்று கூறினார். பிறகு