பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21|முருகுகந்தரம் கொள்ளச் செய்வதே கவிதைத் தொழிலாதலின், பாவேந்தரின் உணர்ச்சி வாய்ப்பு நேரிட்ட போதெல் லாம் பொங்கிப் பீறிட்டது போலும்! மும்மொழி வல்லுநரும்-தனித்தமிழ் இயக்கத் தந்தை யுமான மறைமலை அடிகளார் அவர்களை ஒரு முறை அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்த அழைத்திருந்தோம். மறைமலை அடிகளாரை வரவேற்றுச் சிதம்பரம் தொடர் வண்டி நிலையத்தில் கூடியிருந்த மாணவர்கள் தமிழ் வாழ்க! அடிகள் வாழ்க! இந்தி ஒழிக! தமிழ் வெல்க! என்று முழக்கம் எழுப்பியது கேட்டு அடிகள் மகிழ்ந் தார். பின்னர் இராமாயணம் ஒழிக" என்பதைக் கேட் டும் தலையசைத்தார். அடுத்து புராணங்கள் ஒழிக, பெரிய புராணம் ஒழிக’ என்னும் முழக்கம் தொடர்ந்த போது அடிகளாருக்கு அது பிடிக்கவில்லை. அடிகளார் அதை நிறுத்தச் சொன்னுர், என்ருலும் அவ்வப் போது சிலர் அந்த முழக்கத்தையும் எழுப்பி வந்தனர். அடிகளார் தங்குமிடம் சேர்ந்தார். அங்கு என் தந்தை யாரை (மறைந்த மு. கலியான சுந்தரனுர்) யும் என்னை யும் அழைத்து மற்றவை எல்லாம் நியாயம்! ஆல்ை பெரிய புராணம் ஒழிக, என்பது நியாயமல்ல; அது புராணம் அல்ல; திருத்தொண்டர் வரலாறு; அது வட நாட்டினின்றும் வந்ததல்ல- தென்னுட்டவருடையது.! சிவனைப் போற்றும் சமயம் தென்னுட்டவருடையது! அது ஒழிக. என்பது முறையல்ல’’ என்று விளக்கினர். அப்பொழுது என் தந்தையார்-பெரிய புராணத்தில் உள்ள அறிவுக்குப் பொருந்தாத கூற்றுக்களையும், தமிழரின் மான வாழ்வுக்கு மாறுபட்டதாக அமையும் ஒழுகலாற்றையும் கூறி, இதனை எப்படி நமது மரபாக ஏற்பது? என்று கேட்டார். அப்படி ஐயம் எழுவது, முழுமுதற் கடவுள் சிவபெருமானிடம் பற்றின்ம்ை. ல்ேயே' என்ருர் அடிகள் . அப்படியால்ை, சிவப் பற்று கொண்டால் அறிவுக்கு இடமில்லையா?’ என்ருர் தந்தை. "எல்லாம் அவன் செயல் என்று சிவத்தை ஏற்றவர்க்கு-பெரியபுராணத்தில் ஏதுவும் குற்றமாகத் தெரியாது? என்று அடிகள் விடையளித்தார். அவரிடம் கொண்டிருந்த மதிப்பால் மேலும் அதுபற்றி அவரிடம்