உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு-1 ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு (இத்தொடர் பொது வாகத் தமிழ் அறிஞர்கட்கும் அன்பர்கட்கும் பிடித்தது. அவர்களுடைய சரியான பிடி இதுதானே ! பேராசிரியர் டாக்டர் மு.வ.வே இத்தொடரில் மிகவும் ஈடுபாடு கொண் டிருந்தார் ! அவருக்கு-அவர் கட்டிய மனை தாயகத் திற்கு - நிலம் வாங்க உதவியது பல்கலைக்கழக இடைக் கலை வகுப்பு மாணவர்கட்கு அவர் எழுதிய தமிழ் நெஞ்சம் என்ற பாடப் புத்தகம் முதல்முறை அந்தப் புத்தகம் கட்டடம் செய்யப்பட்டு அச்சகத்திலிருந்து தன்னிடம் வந்ததும் (அப்போது டாக்டர் மு. வ. 32, கந்தப் பிள்ளைத் தெரு, சேத்துப்பட்டு வீட்டில் குடியிருந்தார்; அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார் ! தான்(தான்) பெற்ற பிள்ளை ஆயினும் அதைப் பார்த்துப் பார்த்துத் தாய் மகிழ்வது போலப் பேராசிரிய எழுத்தாளனுக்கும் கலைஞ னுக்கும் அந்த மகிழ்ச்சி இருப்பது இயல்பு. அப்படித்தான் பெற்ற குழந்தையைப் பார்க்கும் தாய்போல் பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர், பார்த்தாயா அப்பா! புத்தகத்தின் தொடக்கத்திலும் ஈராயிரம்"; முடிப்பிலும் ஈராயிரம்' என்று சுட்டிக் காட்டி மகிழ்ந்தார். இப்படிப் பட்ட ஓரின்பம்தான்-காலஞ் சென்ற என் மனைவியின் டாக்டர் பட்ட ஆய்வுக்கான திருப்புரை இன்பம், பேராசிரியர் மு. வ. வுக்குப் புகழ் தேடித் தந்த முதல் நூல் கி.பி. 2000 என்பதும் நினையத் தக்கது. பேராசிரியர் ,ஈராயிரம் அந்தாதிக்கு அடிப்படை இப்போது விளங்கும்: