உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சும் அங்கமும் 9器 நீதிநெறிகளை விளக்கி உலகிற்கு ஒதி யருளிய குமரகுருபரர் கல்லமைச்சர்க்கு மற்ருேர் உவமையைக் குறிப்பிடுகின்றர். யானையை அடக்கிச் செலுத்தும் ஆற்றல் வாய்ந்த பாகனே ஒப்பான் பண்புடைய அமைச்சன் என்று பகர்ந்தார் அப்புலவர், மதங் கொண்ட யானே எத்துணைக் கொடியதாக வயமிழந்து செல்லினும் அதனைத் தன் வயப்படுத்தவே பாகன் பெரிதும் முயல்வான். அஃதேபோல் அாசன் வயப் படாது அறவழியில் செலுத்தும் ஆற்றல் அமைச் சர்க்கு வேண்டும் என்று விளம்பினர். செவிசுடச் சென்ருங்(கு) இடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா கவுண்மதத்த கைம்மாவயத்ததோ பாகுமற் றெத்திறத்தும் அம்மாண் பினவே அமைச்சு.” - என்பது அவரது நீதிநெறி விளக்கமாகும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்பான் தலைசிறந்த பழந்தமிழ்ப் பாண்டிய மன்னன். இவனது அரசவைப் புலவராக விளங்கிய மாபெரும் புலவர் மாங்குடி மருதனர். அவர் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை அம் மன்னனுக்கு உற்ற துணேவராய் விளங்கிக் கழித்தார். அம் மன்ன அனுடனும் அவனுடைய அமைச்சர்களுடனும் இடை பருது பழகிய காரணத்தாலும் பண்பட்ட தம் துண்ணிய அறிவாலும் அமைச்சர்க்கு வேண்டிய அரிய இயல்புகளேயெல்லாம் தாம் பாடிய மதுரைக் காஞ்சி என்னும் இனிய நூலுள் சுருக்கமாகத் தொகுத்துச் சொல்லுகின்றர். . - அரசனிடம் காணப்பெறும் நன்மை தீமைகளைப் பகுத்து உணரவேண்டும். அவற்றுள் தீயன விலக்கு