24
மலருக்கு மது ஊட்டிய வண்டு
24 மலருக்கு மது ஊட்டிய வண்டு
‘'எதுக்கு? வரம் கேக்கவா...' கல்யாணி அம்மாள் கலகலவென்று சிரித்தாள்.
'குறும்பு உன்னை விட்டு எங்கேடீ போகும்?' அத்தனை வயசுக்கப்புறமும் பாகவதர் மனைவியின் தலையில் செல்லமாக ஒரு குட்டுக் குட்டினார்.
'ஐயா..." சிந்தனை கலைந்த பாகவதர் தலை நிமிர்ந் தார். எதிரே சோபியா உதயசந்திரன் போல் நின்று கொண்டிருந்தாள். தலையின் ஈரத்தை உறுஞ்சக் கட்டிக் கொண்டிருந்த மலையாளத்து ஈரிழைத் துண்டு இப்போது இல்லை. அழகாக வாரிக்கொண்டு தலையில் மல்லிகைப்பூ வைத்துக் கொண்டிருந்தாள். அது அறையெல்லாம் மணத்தது.
அருகிலிருந்த சோபிபாவிடம், "இந்தத் திருக்கார்த் திகையின் போது அகல்விளக்கு ஏத்தறாளே? அப்போ உனக்குப் புதிசா ஏதாவது தோணறதா? நீயும்தான் பார்த்திருப்பியே?’ என்று கேட்டார்.
"ஆமாம், குழந்தை அவள், அவளைப் போய் பெரிய பெரிய கேள்வியெல்லாம் கே ளு ங் கோ; எனக்கே புரியலே...' என்று கல்யாணி அம்மாள் வக்காலத்து வ்ாங்கினபோது பாகவதர் சட்டென்று குறுக்கிட்டுக் கூறினார்:
'உனக்குப் புரியலேன்னா, ஒருத்தருக்கும் புரியா துங்கறது உன் நினைப்புப் போலிருக்கு! நான் என்ன புராணக் கதையா கேக்கறேன்? கண்ணாலே பார்க்கிற போதே ஞானோதயமாகிற மாதிரி ஒரு பெரிய தத்துவம் புலப்படலியோ?”
- சொல்லுங்கோ ஐயா, தெரிஞ்சுக்கறேன்.' சோபியா வின் இந்த பதில் கல்யாணி அம்மாளுக்குத் திருப்தியாக இருந்தது. பாகவதர் விளக்கினார்: