உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மலருக்கு மது ஊட்டிய வண்டு

28 மலருக்கு மது ஊட்டிய வண்டு

'தயவு செய்து என்னை மன்னியுங்கள் ஐயா, உங்களிடம் சொல்லக் கூடாது என்கிற எண்ண மில்லை. ஆனால், அ த ற் கா ன துணிவு வராத காரணத்தோடு, சொல்லி ஆகவேண்டிய சந்தர்ப்பமும் இப்போதுதான் நேர்ந்தது. இன்று பாபு கச்சேரி செய் கிறார் என்றால், அது அவருக்கு யாரும் கற்றுக் கொடுத்து மாத்திரம் வந்து விட்டதல்ல என்பது என் கருத்து. காரணம், அவர் மகா மேதையான தங்களுடைய மகன். உங்களுடைய இசையும், ஞானமும், விரும்பியோ விரும்பாமலோ இயற்கையாகவே அவரது இதயத்தின் அடித்தளத்தில் முழங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த வாயிலைத் திறந்து விடும் பணியை துரண்டிவிடும்; ஒரு கைங்கரியத்தைத் தான் நான் செய்தேனேயன்றி அவருக்கு நான் ஆசானல்ல; நீங்களே அவரது குரு '

பாகவதருக்கு மெய் சிலிர்த்தது. சோபியா கூறிக் கொண்டிருந்தாள்:

"உங்களிடம் அவருக்கு ஏற்பட்ட வறட்டு கர்வமும், மேலை இசை மீது உள்ள மோகமும் அவரது கண்களை மறைத்திருந்தன. பாசியை விலக்கித் தெளிந்த நீரைக் காட்டியதும், அதை அவர் உணர்ந்து பற்றிக் கொண்டது தான் இறைவன் அருள். அந்தப் பற்றுதலும், அருளும் தான் அவர் மீது எனக்கு ஒரு நம்பிக்கை ஒளியை ஊட்டியது. ஆனால்...காலம் வரும்வரை, அமெரிக்காவில் டேவிட்டிடம், தான் சங்கீதம் கற்றுக் கொள்ளுவது யாருக்கும் தெரிய வேண்டாம் கொஞ்சகாலம் ரகசிய மாகவே இருக்கட்டும் என்ற பாபுவின் ஆரம்ப வேண்டு கோளை என்னால் மறுக்க முடியவில்லை. எப்படியாவது அவரை இசைக் கலையில் சோபிக்கச் செய்யவேண்டும்; அதன் மூலம் உங்கள் மனப்புண் ஆறவேண்டும்; இதயம் குளிர வேண்டும்-என்கிற ஆவல்தான் என்னை பாபுவின் கோரிக்கைக்கு இணங்கச் செய்துவிட்டது. இதைக்கூறும்