பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தல்லே...என்னலேயும் பயன் தரும்படியா வெளிப் படுத்த முடியல்லே... நானும் என் நண்பர் நாராயணனும் தினம் இதைப் பத்தியே பீச்சுக்குப் போய் உக்கார்ந்து, மணிக்கணக்கா பேசுவோம். ஒருநாள்...அஞ்சு வருஷத்துக்கு முன்னே...இதே தேதி...இதே நேரம்...நாராயணனும். நானும் பீச்சில: உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தோம். (திருப்புக் காட்சி) நஈரா ; டேய்...ரவி...இந்தாடா வேர்க்கடலை...கடலையே பார்த்துக் கிட்டே இருந்தா போதுமா...நடக்கவேண்டி யதை யோசிப்போம். என்னைப் பாருப்பா! சவி : நாராயணு! ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா போதும்... இந்த உலகத்துக்கு நான் யார்னு காட்டிடுவேன். நரரா : எப்படி? எந்த மாதிரி சந்தர்ப்பம் உனக்கு வேணும்? ரவி : நான் ஏழையா இருக்கறதுனலே, என்ைேட ஒவியத் திறமை எடுபடலே. இல்லாளை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்தத் தாய் வேண்ட்ாள்னு பாட்டு உண்டு. அன்னையே விரும்பலேன்ன அன்னியர்கள் எப்படி விரும்புவாங்க? நாரா : தெரிஞ்ச கதையை ஏம்பா பேசுறே? அரைச்ச மாவையே அறைக்கிற மாதிரிதான். ரவி : ஆமா...என் கையில மட்டும் கொஞ்சம் பணம் இருந் தால் போதும், நாரா , ம்...பணம் வந்ததும், பஞ்சு மெத்தை வாங்கி. வயிறு முட்ட சாப்பிட்டுட்டு, காலை நீட்டி படுத்து எட்டுத் தெருவுக்கு கேட்குற மாதிரி குறட்டை ‘விடுவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/55&oldid=777118" இலிருந்து மீள்விக்கப்பட்டது