பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

35


கால் பந்தாட்டத்தின் முக்கிய அங்கங்களாக விளங்கும் மேற்கூறிய பகுதிகள் அனைத்தும், ஒவ்வொரு ஆட்டக்காரர் உள்ளத்திலும் ஊன்றிப் பதிய வேண்டிய அம்சங்களாகும்.

விதிகளோடு கூடிய விவரங்களை பரிபூரணமாக தெரிந்து வைத்திருப்பதுடன், புரிந்து கொண்டவாறு செயல்படுத்தும் பொழுதுதான், எதிர்பார்க்கின்ற பயன் எப்பொழுதும் எல்லோருக்கும் கிடைக்கும்.

அடுத்து, ஆட்டக்காரர் ஒவ்வொருவரும் தனக்குரிய தகுதியை கண்டறிந்து கொண்டு, அதன் வழியே கால் பந்தாட்டத்தில் தனக்குரிய பங்கு என்ன என்பதையும் நிர்ணயித்துக் கொண்டு ஆடத் தொடங்கினால், ஆட்டத்தில் எழுகின்ற ஒரு சில அசம்பாவிதங்கள் நிகழ்வதற்குரிய நிலைமை எழாமல் தவிர்த்துவிடலாம்.

ஆடுவதற்குரிய இயக்கமும் முன்னேறுவதற்குரிய நுணுக்கமும் எளிதாகக் கிடைக்கும்.

இனி, ஒவ்வொருவரும் தனது திறமையையும், தகுதியையும் புரிந்து தனக்குரிய இடத்தை தேர்ந்துகொள்ளும் முறையைக் காண்போம்.