14
கால் பந்தாட்டம்
ஆங்கிலேயர்கள் அவர்களுக்குள்ளும், படைத்துறையினர் அவர்களுக்குள்ளும், பாரத மக்கள் தங்களுக்குள்ளுமே போட்டி நிகழ்ச்சி ஆட்டத்தை ஆடினர். இது பரவலாக, ஒருவருக்கொருவர் ஆடும் 'நட்பாட்டப் போட்டி' (Friendly Match) →q!,ı' Ludm&Ġ6u இருந்து வந்தது.
ஒருமுறை ‘சாவா பசார் கால்பந்தாட்டக் குழு’ (Sava Bazar Club) என்ற இந்தியர்களைக் கொண்ட குழு, ஐரோப்பிய ஆட்டக்காரர்களைத் தோற்கடித்துவிட்டதன் காரணமாக, இந்தியருக்கும் இந்த விளையாட்டில் அதிகமான ஈடுபாடு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டதன் பின்னரே, அகில இந்தியக் கால்பந்தாட்டக் கழகம் ஒன்றைத் தொடங்கும் முயற்சியானது எல்லா துறையினருக்கிடையிலும் ஏற்பட்டது. அதன் பயனாக 1937ஆம் ஆண்டு அகில இந்தியக் கால்பந்தாட்டக் கழகம் தோற்றுவிக்கப்பட்டு, சிறந்த முறையில் பணியாற்றத் தொடங்கியது.
ஆட்டத்தின் வளர்ச்சி
பந்தாட்டம் நாளும் வளர்ந்தது. ஆடுவோர் தொகையும் கிளர்ந்தெழுந்தது. அதுவே பெரு வளர்ச்சியாக அமைந்ததுடன், ஆட்டத்திற்கு ஒரு மறுமலர்ச்சியாகவும் இருக்கவே, ஒன்றுபட்ட கருத்துடன் பாரதம் ஒலிம்பிக் போட்டிகளிலே பங்கு கொள்ளச் சென்றது.
1948ஆம் ஆண்டு, இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று, பிரான்சுடன் ஆடித் தோற்றாலும், அதுவே அருமையான அனுபவமாக நமக்கு அமைந்துவிட்டது.