பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

37


செயல்படுத்தும் பொழுது வெற்றி ஏற்படுகின்ற விதங்களிலேதான், ஆர்வமும் ஆசையும் பெருகும். உற்சாகம் உள்ளம் நிரம்பி வழியும்.

இவ்வாறு உடல் திறமையைப் பெருக்கிக் கொண்டு, உற்சாகத்தை நிரப்பிக்கொண்டு, ஆடவருகின்ற ஆட்டக்காரர்களுக்கு அடுத்துத் தேவைப்படுவது ஆட்டத்திறன் நுணுக்கங்களாகும். ஆகவே, ஆட்டத்திறன் நுணுக்கங்களோடு ஆடும் ஒருவரை, அதற்கேற்ற முறையில் உடல் வளைந்து கொடுக்க, அயர்வின்றி முழு நேரமும் ஆடும் ஒருவரைக் காண்கின்ற ரசிகர்கள் போற்றிப் புகழ்வார்கள். ஏற்றி மகிழ்வார்கள். ஆமாம்! ஒரு ஆட்டம் எதிர்பார்ப்பது உண்மையான விளையாட்டு வீரர்களைத்தான்.

கால் பந்தாட்டத்தில் ஈடுபடுகின்ற அத்தனை பேரும், தங்கள் உடல் நிலையில், உடல் அமைப்பில், ஆடவிரும்புகின்ற தன்மையில் மாறுபடுகின்றார்கள். வேறுபடுகின்றார்கள். அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டு விளையாடுகின்ற ஆட்ட நிலையிலே (position) தான், ஆட்டமும் விருத்தியாகும். விரும்பிய புகழையும் தரும். இந்த முறையிலே நாம் பார்க்கும்போது, ஒரு குழுவில் இருந்து ஆட இருக்கின்ற 11 பேர்களிலும், எவரெவர் எந்த இடத்திலிருந்து ஆடலாம் என்பதை நாம் முன்கூட்டியே கணித்துவிடலாம்.

அதன்படி, ஆடக்கூடிய பதினோரு பேர்களில் ஒருவர் இலக்குக் காவலர், இருவர் அல்லது மூவர் கடைக்காப்பாளர். மூவர் இடைக் காப்பாளர், மீதியுள்ள நால்வரும் அல்லது ஐவரும் முன்னோட்டக்காரர்களாகப் பிரிந்து நின்று தங்களுக்குரிய இலக்கைக் காத்து-