உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


3. விளையாட்டு வீரர்களுக்கு
வேண்டிய தகுதியும் திறமையும்

1. விளையாட்டு வீரர்கள் (Players)

கால் பந்தாட்ட வீரர்களாக வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொருவரும், தமது உடலைத் தகுந்த முறையில் பேணிக் காக்க வேண்டும். உடல் திறமாகவும், தரமாகவும் விளங்கினால்தான் செயலிலும் செழுமை இருக்கும். ஆட்டத்திலும் முழுமை பிறக்கும். வலிய உடலுக்குள்ளேதான் வைரம் பாய்ந்த நெஞ்சுரம் (Stamina) வாழும், வளரும்.

வளர்கின்ற நெஞ்சுரத்தினால் தான் மனம் மேன்மேலும் திட்டங்கள் தீட்டும். திட்டங்களைச்-