34
கால் பந்தாட்டம்
கால் பந்தாட்ட குழுவினரில் ஒருவர், பந்து கடந்து போன பக்கக் கோட்டிற்கு வெளியே நின்று, பந்தை ஆடுகளத்தினுள் இட்டு, ஆட்டத்தை மீண்டும் தொடர எடுத்துக் கொள்ளும் முயற்சியையே 'உள்ளெறிதல்' என்கிறோம்.
உள்ளெறியும் ஆட்டக்காரர், பந்தை உன் எறிவதற்கு முன், ஒரு சில விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். இரண்டு கைகளாலும் தலைக்கு மேலாக இருக்குமாறு பந்தைப் பிடித்துக்கொண்டு, ஆடுகளத்தில் ஒருபுறம் முகமிருப்பதுபோல எதிர்நோக்கி, கால்களில் ஒரு பகுதி, பக்கக் கோட்டைத் தொட்டுக் கொண்டே அல்லது தொடாமலோ நின்று, பந்தை உள்ளெறிவதே முறையான ஒன்றாகும்.
தவறான முறையில் உள் எறிந்தால், எதிர் குழுவினருக்கு அந்த வாய்ப்புப் போய்ச் சேர் அவர்களில் ஒருவர் உள்ளெறிய ஆட்டம் தொடரும்.
உள்ளெறிவதால் பந்தை நேரே இலக்கினுள் தூக்கியெறிந்து வெற்றி எண் பெற முடியாது.
தான் எறிந்த பந்தை விளையாடுவதற்கு முன் தானே ஆடினால் அது தவறாகும். அவ்வாறு ஆடினால் எதிர்க்குழுவினர் ‘மறைமுகத் தனி உதை' வாய்ப்பும் பெற்று உதைத்தாட மீண்டும் ஆட்டம் தொடரும்.
முக்கிய குறிப்புகளை முழுதும் தெரிந்து கொண்ட நீங்கள், பழுதறப் பயன்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆடுவதற்குரிய ஆர்வத்தால் கற்றுக்கொள்ள முன்வந்திருக்கும் உங்களுக்கு, எந்த இடத்தில் இருந்து எப்படி ஆடினால் இனிதாக இருக்கும் என்ற விவரமும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.