டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
39
மேசைப் பந்தாட்டம், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் வரும் பந்தை விரைந்து ஆடுகின்ற லாவகமும்; திடீரென்று திசைமாறி வருகின்ற, வர இருக்கின்ற பந்தின் குறிப்பறிந்து ஒடிப்பிடிக்கும் பண்பும் கூடவே இருக்க வேண்டும்.
ஆடும் முறை
மேலே கூறப்பட்ட தகுதிகளை முதலில் வளர்த்துக் கொண்ட பிறகு, இலக்குக் காவல் தனை எவ்வாறு நிறைவாகக் காக்கலாம் என்று இனி காண்போம். வருகின்ற பந்தைப் பிடித்துத் தடுத்துக் காப்பதுதானே இலக்குக் காவல்முறை என்று சொல்வது எளிது. செய்வது கடினம். சொல்லுதல் யார்க்கும் எளிதல்லவா?
பந்தைப் பிடிப்பது ஒரு முறை. பந்தைத் தடுப்பது ஒரு முறை. பந்தைக் கைகளால் அடித்தோ, தள்ளியோ, உதைத்தோ விடுவது இன்னொரு முறை. தாவிக் குதித்துத் தரையில் விழுவது, பாய்ந்து பிடிப்பது மற்றொரு முறை. தரையோடு தரையாக வரும் பந்தை, பந்துக்கு முன்னால் உடல் இருக்குமாறு இரு கால்களையும் சேர்த்து நின்று, இரு கைகளையும் இணைத்து விரித்துப் பந்தைப் பிடிப்பது அடுத்த முறை.
சில நேரங்களில் மெதுவாக உருண்டோடி வரும் பந்துகூட, இலக்கினுள் சென்றுவிடும். ஆகவே, அலட்சியம் செய்யாமல் அக்கறையுடன் உடம்பை வளைத்துக் குனிந்து, பக்குவமாகப் பிடிப்பதும் ஒரு முறை.
இவ்வாறு, பந்து உயரமாக வரும் பொழுதும், மார்புக்கு நேராக வரும் பொழுதும், முழங்கால்களுக்கு