பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 55

ஊன்பிறங் கொளிரும் வேலான் ஒர்ந்துதன் உவாத்தி சொல்லால் தான்புறங் காட்டப் பட்டு . எனக் சிந்தாமணி: ஆசிரியனை அரசவை உவாத்தியாகக் கூறியது.

காலப்போக்கில் பல கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியனுக்கும் . இச்சொல் பயன்படுத்தப்பட்டது.

'தவாஅக் காதலொடு தகையாழ் காட்டும் உவாத்தி யாதலின் உறுதியும் அதுவென' என்னும்

பெருங்கதை? யாழ் ஆசிரியன்ாக அமைந்த உதயணனை உவாத்தி ஆக்கியது. இவ்வாறாக உபாத்தியாயன் ஆசிரியனை ஒட்டிக் கொண்டது.

குரு என்னும் சொல்லும் ஆசிரியன் என்னும் பொருளில் ஒட்டப்பட்டதாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் தொடரில் ஆசிரியருக்காகக் குரு நிற்பதைக் காணலாம். அப் பொருளில் இடைக்கால இலக்கியங்களில் இடம் பெற்றது.

"குருவின் வாசகம் கொண்டு கொற்றவன்' .

என்றும்

'தன்துணைக் குருவை எண்ணி” என்றும் கம்பர் பாடு கின்றார். இங்கெல்லாம் அரசவை ஆசிரியன் என்னும் கருத்தில்

குரு' என்னும் சொல் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், குரு என்னும் சொல்லினது மூலத்தோற்றம் எவ்வ கையிலும் ஆசிரியரை ஒட்டும் நிலையிலும் இல்லை.

'சம்வருணன்' என்றொரு அரசன். அவனது மகன் பெயர் குரு', அவன் பெயரால் சமந்தபஞ்சகம்’ என்னும் நகர் 'குருச் சேத்திரம்' எனப் பெயர்பெற்றது. இவனது வழியினர் குருகுலத் தார்’ எனப்பட்டனர். குரு' என்னும் மன்னன் அறிவுத்

24. சிவ. சிந் : 1090 : 1.2 25. பெருங் : 1 : 44 :131 26. கம்ப இரா : 1 : 7 : 1.6 - 1