21
ஆண்ணம் வெற்றி வாகை சூடி வீறு பெற்று விளங்கிக் நாண்டிருந்தது என்ருல், அதற்குரிய உண்மைக் iரணத்தை ஆராய்ந்தோமானல், அதன்விட்டகுறை
|தாட்டகுறை என்று கூறுவதற்கேற்பவே அமைக் iள்ளது புரியும்.
மிகவும் பழங்காலத்தில் இருந்தே, வளைகோல் பக் நாடடம் நம் பாரதத்தில், பல்வேறு வகையில் பல்வேறு லுயர்களில் விளையாடப் பெற்று வந்திருக்கிறது iன்ற வரலாற்றினை நாம் காண்கிருேம். அதனை உறுதிப்படுத்தும் பல சான்றுகளும் உள்ளன.
இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன் சிறப்புற விளங்கிய சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய உண்மை வரலாற்றை, நிலம் அகழ்ந்து ஆராயும் நிபுணர்களால் நாம் அறிந்தோம். அதன் தொடர்பாக, மொகஞ்சோதரா, ஹரப்பா போன்ற பகுதிகளில், பல வகையான ஓவியங்கள் சிற்பங்கள் கிடைத்தன.
வாழ்க்கை முறைகளில் சிந்து சமவெளி நாகரீக மககள் வளமாக வாழ்ந்திருந்தது போலவே, விளையாட் டிலும் அவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கினர்கள் என்பதற்கும் உயிரோவியம் போன்ற ஓவியங்கள் கிடைத்தன.
அத்தகைய விளையாட்டுக்களில் சதுரங்கம், பெண் கள் ஆடும் பந்து விளையாட்டுக்கள், குதிரை மீதிருந்து ஆடும் பந்து விளையாட்டுக்கள், வளைந்த கோலால் ஆடும் பந்தாட்டம் போன்றவைகளின் சிற்பங்களும் ஒவியங்களும் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.