இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49
இவா்கள் மூவரும் இணையாக இருந்து அளப்பாிய இளமையில் ஆர்வத்துடன் பயிற்சி செய்தால்தான், தாக்கத்தில் வெற்றி பெற முடியும்.
இலக்கின் இடப்புறமாக உள்ள கடைக் கோட்டியிலிருந்து தண்ட முனை அடி எடுக்கப்படும்பொழுது, பந்தை பிடிப்பவர்-பந்தை அடிக்க இருப்பவருக்கு வலப்புறத்தில் நின்று கொண்டு, தனது இடது கையை நன்றாக நீட்டிப் பந்தைப் பிடித்து நிறுத்த வேண்டும்.
இலக்கின் வலப்புறத்திலிருந்து தண்டமுனை அடி எடுத்தால், பந்தைப் பிடிப்பவர் வலது கையால் பந்தைப் பிடித்து நிறுத்தலாம். ஆனால், எந்தக் கை இயல்பாக பிடிக்க வரும் என்று அவரவர் தன்மைக்கே கூட விட்டு விடலாம்.
பந்தை அடிக்கும் மூன்றாமவர், வாய்ப்பும் வசதியும் வழியும் இருந்தால், பந்தை இலக்கினுள் நேரே அடிக்கலாம். இல்லையெனில் தனக்கு அருகே தனித்துவிடப் பட்டிருக்கின்ற பாங்கர் ஒருவருக்கு வழங்கி, அவரை அடித்தாடச் செய்யவேண்டும்.
பந்தைத்தான் அடித்து விட்டோமே, அது இலக்கினுள் சென்றுவிடும் என்று தற்பெருமை நிறைந்த தன்னம்பிக்கையுடன் தாக்கும் குழுவினர் நின்று கொண்டிருக்கக் கூடாது.
ஏனென்றால், இலக்குக் காவலன் உடல் மீதோ அல்லது காலில்பட்டோ பந்து மீண்டும் திரும்பி வந்தாலும் வரலாம். அப்பொழுது, பந்துக்காக முன்கூட்டியே ஓடிவந்திருந்தால், அதை அடித்து
வளைகோல்-4