பெண்களும் பேரழகு பெறலாம் 2] 3. பயிற்சி செய்கின்ற முறையும் விளக்கமும் (1) பயிற்சியின் நோக்கம்: உடற் பயிற்சி என்பது உடலிலுள்ள அவயவங்களைக் கட்டாயப்படுத்தி இயக்குவது அல்ல. உடலுறுப் புக்களை இனிதாக, எளிதாக, அழகாக, மிதமாக இயக்குவதேயாகும். கட்டாயப் படுத் தி வேதனையுடன் பயிற்சி செய்வதால் எந்த விதப் பயனையும் காண முடியாது. அதே சமயத்தில், இதமாக உணர்ந்து எளிதாகச் செய்யும் போது பயனைப் புரிந்து கொள்ளவும் முடியும். கணக்கிடவும் கூடும். ஹைடிரஜன், கார்பன் கூட்டாக உள்ள காற்றிலிருந்து பிராண வாயுவை மிகுதியாகப் பெறவும்; தேவையற்ற நீரை உடலிலிருந்து வெளியேற்றவும் ; இரத்தக் குழாய்களுக்கு அழுத்தம் அதிகமாகத் தந்து வலிமை ஏற்படுத் தி, இரத்த ஒட்டத்தை விரிவு படுத்தவும்: இரத்தத்திலுள்ள உயிர்ச்சத்துக்களை (Plasma) இன்னும் அதிகப் படுத் தி, சக்தியைப் பெருக்கவும்; தசைகள் உண்டாக்குகிற புதிய திசுக்களை அதிகமாக உண்டாக்கவும்; உடலில் வெப்பத்தை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் காக்கவும்: வேலை செய்யும் போது வீணாகிவிட்ட பழைய திசுக்களை உண்டு பண்ணவும் தான் பயிற்சி
பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/23
Appearance