உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 31. இயங்குவதற்கு போதுமானது. ஆனால் , நாம் அவயங்களை அதிகமாக இயக்கும் போது, உயிர்க்காற்று அதிகமாகத் தேவைப் படுகிறது. ஏனென்றால், உயிர்க் காற்றுத்தான் வாழ்வின் அடிப்படைத் தேவையாகும். அதை இப்பொழுது அறிந்து கொள்வோம். கூடுகட்டிய மார்பு, குவிந்த தோள்கள், அடிக்கடி சளி கட்டித் துன்புறுதல் , இவற்றோடு காட்சியளிப்பவர்கள் எல்லாம் சுவாச உறுப்புக்களைத் சுத்தமாகவும் சரிவரவும் பயன்படுத்தாதவர்கள். அவற்றை சுகமாகவும் சுமுகமாவும் இயக்குவதில்லை. அதனால்தான் அவ்வளவு அவதிப்படுகிறார்கள். ஆகவே, சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பாகச் செய்தால், சுவாச உறுப்புக்களில் உண்டாகும் தொந்தரவு எல்லாம் நீங்கிவிடும். அத்துடன், நுரையீரல், மார்பு திறப்படுவதோடு, பயம், கவலை போன்ற தன்மைகள் எல்லாம் அடியோடு மாறிப் போய்விடுகிறது. மூச்சை இழுக்கும் முறைகளில், மூன்று விதமாக மக்கள் சுவாகிக்கின்றனர். சுவாசித்தலுக்கு நுரையீரல், மார்ப்புக் கூடு, உதரவிதானம் (Diaphragm) மற்றும் அடிவயிறும் உதவுகின்றன. @g troški sol 3 surgii (Throat Breathing) : மார்புக்கும் நுரையீரலுக்கும் உரிய மேல்பகுதியை மட்டும் இயக்கக் கூடிய குறைந்த அளவு சுவாசித்தல். இதனால் குறைந்த அளவு காற்றே துரையீரலுக்குள் துழைகிறது. இந்த இயக்கத்தால் விலா எலும்புகள் சிறிது உயர, அதன் மூலமாகத் தோள் எலும்புகளும், தோள் பட்டைகளும் அதிக இயக்கம் பெறுகின்றன.