உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா செய்கிறோம். இக்காரணத்தால் தான் மேலே விவரித்த பலன்கள் எளிதாகக் கிடைக்கின்றன. (2) எவ்வளவு பயிற்சி செய்ய வேணடும் 2 எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும் என்று உறுதியாகக் கூறுவது எளிதான காரிய மன்று. அது ஒருவருடைய வயது, உண்ணுகிற உணவு, வசிக்கின்ற சூழ் நிலை, தேக அமைப்பு, அவர் நடத்துகின்ற வாழ்க்கை முறையைப் பொறுத்தே நிர்ணயிக்க முடியும். அது தனிப் பட்டவரின் தகுதியை அறிந்தே கூறப்படும். விருப்பத்தையும் முயற்சியையும் கூட அறிந்து தான் நிர்ணயிக்கப்படும். ஆகவே, யார் பயிற்சி செய்தாலும், அவர் முழுதும் களைத்துப் போகின்ற அளவு இருக்காமல், நலிந்து விடாமல் , பயிற் சிக் குப் பிறகு சோம் பல் அடைந்தவர்போல அசந்து படுத்துவிடாமல், பயிற்சி செய்த பிறகு ஒர் இன்ப நிலையைப் பெறும் அளவுக்குப் பயிற்சியை செய்ய வேண்டும். அதுவே பயிற்சி செய்ய வேண்டிய சரியான அளவு. கொஞ் சங் கொஞ்சமாக, தினந் தினம் சலித்துக் கொள்ளாமல், பயிற்சியை எண்ணிக்கையில் அதிகப் படுத்திக் கொண்டே செல்ல வேண்டும். திடீரென்று அதிகம் செய்வதும், ஒரே நாளில் அதிக ஆர்வத்தோடு பயிற்சியை மிகுதிப் படுத்துவதும், உடலுக்கும் மனதுக்கும் நல்லதல்ல. இதை உணர்ந்து போதுமான அத்துடன், பொருத்தமான, மிதமான அளவிலே பயிற்சியைச் செய்தால், எதிர்பார்த்த பலன் எளிதாகவே கிடைக்கும்.