பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 42

இப்பொழுது நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். தலையை முன்புறமாக சாய்த்து. பின்னர் இடுப்புப் பகுதி வளைய முன்புறமாக வளைந்து இடுப்புப் பகுதி முன்புறமாக வைத்துள்ள குதிகால்களினை இலேசாக அழுத்துவது போல குனிந்திட வேண்டும்.

அதன் பிறகு அடிவயிறு மேலும் முன்புறமாக வந்து குதிகால்களின் மீது பட முன்புறமாகக் குனிந்து, நெஞ்சுப் பகுதி மேலும் முன்னோக்கிவர, தரையின் மீது முன் நெற்றி படுவது போல வைக்கவும். - -

தண்டு டம் (spine) நன்றாக வளைவது போலக் குனிந்திருக்கும் இந்தப் பயிற்சியை 10 வினாடி வரை அதே நிலையில் செய்திருக்கவும்.

பின்னர், இயல்பான முச்சோட்டத்துடன் மேலே மெதுவாக நிமிர்ந்து எழும்பி விடவும்.