உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை காலத்திற்கேற்றக் கருத்தாழங் கொண்ட நூல். கற்பவர்க்கும் கற்றபடி பயில் வோருக்கும் கனிவான வாழ்வும் கட்டான உடலும் கிடைக்கும். Јг5 LD ПГобT வாழ்க்கைதான் சுவையான வாழ்க்கை. சுவையைத் தேடும் போது, சிறிது சுமையையும் தாங்க வேண்டியிருக்கும். மனத்தைக் கட்டுப் படுத்திவிட்டால் குணம் தானாகவே விளங்கிவிடும். வளமான சமுதாயத்தைப் படைக் கும் சிறப்பு. வளர்க்கும் பொறுப்பு, வாழ்த்தும் குறிப்பு எல்லாம் கொண்ட நம் தாய்க் குலம், நோயில்லா உடலோடு வலிவான பொலிவான மேனியோடு வாழவேண்டும் என்ற தணியாத ஆவலுடன் இந்த நூலை மீண்டும் வெளியிடுகிறோம். அன்புடன் அளிக்கிறோம். மூன்றாவது பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. பயன் பெற அழைக்கிறோம். பதிப்பகத்தார்