உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 33 உடனேயே, உள்ளே இருக்கும் நுரையீரலுக்கு அதிகமாக விரியக் கூடிய இடம் கிடைத்துவிடுகிறது. ஆகவே, அதிகமான காற்றை உள்ளே இழுத்து நிரப்பி வைத்துக் கொள்ளும் நிலை, நுரையீரலுக்கு உண்டாகிவிடுகிறது. ஒவ்வொரு முறையும் சுவாசத்தை இயக்குகின்ற தசை முழுவதும் இயங்க, நுரையீரலில் உள்ள ஒவ்வொரு செல்லும் காற்றை அதிகம் பெற, அங்கே உள்ள காற்றுப் பைகள் (Air Sacs) தேவையான காற்றைத் தேக்கி வைத்துக் கொள்கின்றன. காற்றைப் பிடித்துக் கொள்ளக் காத்திருக்கும் காற்றுப் பைகளை விரித்து விட்டுப் பார்ப்போமானால், அதன் பரப்பளவு 1000 சதுர அடி தூரம் இருக்கின்றன என்று விஞ் ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனர் என்றால் அதற்கு எவ்வளவு காற்று வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்! ஆகவே, நமது தசைகள் திசுக்களாலும், திசுக்கள் செல்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. அவைகளுக்கு முக்கியத் தேவை உயிர்க் காற்றுதான். அந்த உயிர்க் காற்றுக் காக, காற் றினை உள்ளே இழுக் கிறோம். நூரையீரலை நிரப் புகிறோம். பிறகு, நம் இயக்கத் திற் குப் பயன்பட்டுத் தூய்மையிழந்த கரியமில வாயுவுடன், மற்றத் தேவையில் லாத காற்றினையும் வெளியே அனுப்பி விடுகிறோம். இவ்வாறு நமக்கு மிகத் தேவையான காற்றைப் பெறும் போது மூக்கினால் தான் சுவாசிக்க வேண்டும்! ஏன் ? வாயினால் சுவாசிக்கக் கூடாதா என்றும் / # + கேட்கலாம். நம் மூக்கின் உள்ள மயிர்த் தொகுதிகள் அதிகம் இருக்கின்றன. அவைகள் காற்றிலிருந்து வரும் புழுதித் *