4
வருகிறது. என்றாலும் வெவ்வேறு விதி முறைகள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில், தமிழகப் பகுதிகளைத் தவிர, ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்றி விளையாடி மகிழ்ந்திருக்கின்றார்கள்.
மாறுபட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடத்திய தொடர்போட்டிகள், இந்த விளையாட்டின் விருத்திக்கு வழியமைக்கவில்லையாதலால், ஆங்காங்கே குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களில் அதற்கென்று அமைக்கப்பட்ட மாநில சங்கங்களின் மூலம், அந்தந்த மாநில அளவில் குறிப்பிட்ட சில விதிமுறைகளின்படி, தொடர்போட்டிகள் நடந்தேறி வந்திருக்கின்றன.
நம் நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் கூட கேரம் வெகுவாகப் பரவிவருகின்றது. குறிப்பாக மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில், மக்கள் விரும்பி ஆடி, இதில் தேர்ச்சி பெற்ற ஆட்டக்காரர்களாக மாறி வருகின்றனர் என்ற செய்திகள் வந்தவண்ணமாய் இருக்கின்றன.
இந்திய கண்டத்தில் உள்ள மக்களிடையே, கேரம் வெகுவாக ஊடுருவி விட்டிருக்கிறது. இந்த விளையாட்டைப் பரப்புவதில், மத்திய அரசு கல்வி சமூக நல இலாகாவினரால் 1970ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய கேரம் சங்கமும், அகில இந்திய ரீதியில் இயங்கும் பல விளையாட்டு ஸ்தாபனங்களும், எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தையும் பாராட்டுவதுடன், இந் நாட்டின் தலை சிறந்த கேரம் ஆட்டக்காரர்களோடு ஆடி, இந்த விளையாட்டில் உள்ள கலை நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காலத்திற்கேற்ப விதிமுறைகளை மாற்றி, எல்லோரும் இதில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் நோக்கத்தோடும், கலை நுட்பத்தோடு இதை ஆடும்பொழுதும், பார்த்து ரசிக்கும்