உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா அதற்கு வேலை (Work) என்று பெயர். ஆனால் பயிற்சி என்பது, நாம் விரும்பிச் செய்வது. வேண்டிய பயனை எதிர்பார்த்து ஒரு முறையோடு, அளவோடு, வழி மாறாமல் வகையாகச் செய்வது. ஆகவே, உறுப்புக் களைப் பயன்படுத்தும் வேலைக்கும் உடற்பயிற்சிக்கும் ஒரு சில முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. / வேலையைச் செய்யும் போது வருமானத்தை எதிர்பார்த்துச் செய்கிறோம். வருமானம் கிடைத்ததும் வேலையை மீண்டும் நாம் நினைப்பதில்லை. பயிற்சி செய்யும் போது இன்பம் கிடைக்கிறது. பயிற்சிக்குப் பிறகும் நாம் உடலை நினைக்கிறோம். அத்துடன், மூச்சிழுத்தல் போன்ற முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். - வேலை செய்யும் பொழுது, மூச்சிழுத்தலும் வெளி விடுதலும் இயற்கையாகவே நடைபெறுகின்றன. அது தன்னியக்கமான செயல். உடல் தன் தேவையறிந்து தானே வேண்டிய உயிர்க்காற்றைப் (Oxygen) பெற்றுக் கொள்கிறது. ஆனால் பயிற்சி செய்யும் பொழுது, முறையோடு தான் மூச்சிழுக்க வேண்டும். மூச்சை வெளியேற்ற வேண்டும், என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இந்த சுவாச வேலையின் சரியான முறையைப் பொறுத்துத் தான் சரீரத்தில் வனப்பும் செழிப்பும் ஏற்படும். L மூச்சிழுத்தல் என்பது, நாம் இடைவிடாமல் செய்து கொண்டிருப்பதுதானே என்று நீங்கள் கேட்கலாம். நாம் இயல்பாக இழுக்கின்ற மூச்சு, சாதாரணமாக நாம்