42 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா கால்களை இணைந்து இருக்குமாறு សាា வைத்து, நின்று, இருபுறமும் இருகைகளையும் விரித்து வைத்து நேரில் உள்ள பொருளைப் பார்ப்பதுபோல, நிமிர்ந்து நிற்கவும் , மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும். - சிறிது நேரம் கழித்து மூச்சினை வெளியே விடவும் (15 முறை) - பயிற்சி 2 நிற் கும் நிலை முதல் பயிற்சியைப் போல், மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்ளவும். கால் களை உயர்த்தி முன் பாதங்களினால் (Toes) நிற்கவும். சிறிது நேரம் கழித்து, முன் நிலைக்கு வந்து, மூச்சை விடவும் (15 முறை) பயிற்சி 3 நிற்கும் கால்களின் நிலை முதல் பயிற்சியைப் போல் , கைகள் இரண்டையும் , தொடையின் பக்க வாட்டில் தொங்க விட்டிருக்கவும். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்ளவும் கைகளைப் பக்க வாட் டில் தோள் அளவுக்கு உயர்த்தவும். பிறகு படத்தில் உள்ளது போல இடுப் பை சுழலச் செய்து திருப்பவும். சிறிது நேரம் கழித்து,
பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/44
Appearance