உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16



ஒன்றை எடுத்து, எதிராளியிடம் நடுவர் கொடுக்க. அது மைய வட்டத்தினுள் எதிராளியால் வைக்கப்படும்.

அத்துடன், ஆடவிருக்கும் தவறிழைத்தவர் பாங்கரது ‘ஆடும் வாய்ப்பு’ (Turn) பறிக்கப்பட்டு, அவருக்கு அடுத்து ஆட இருக்கும் எதிராளிக்கு அந்த ஆடும் வாய்ப்புப் போய்ச் சேரும்.

எனவே, மெளனமாக ஆடுவது, யோசனையை வளமாக்குவதுடன், இதுபோன்ற வேண்டாத தண்டனையிலிருந்தும் விடுவித்துத் தரும என்பதை ஆட்டக்காரர்கள் அவசியம் உணர்ந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

முதலில் அடித்தாடும் வாய்ப்பினைப்பெற்ற ஆட்டிக்காரர், காய்கள் அனைத்தையும் ஆட்டப்பலகையில் முறையாக அடுக்கி வைத்துக்கொண்டு அடித்தாடத் தொடங்குவதற்கு முன், ஆடுதற்காகப் பயன்படும் ஆட்டப்பலகை,காய்கள் அடிக்கப் பயன்படும் அடிப்பான் போன்றவற்றின் அளவையும் அமைப்பையும் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.