பெண்களும் பேரழகு பெறலாம் 29 - ஆலோசித்து செய்வது நல்லது. கிராமப் புறத்தில் வாழும் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதும், கர்ப்பப்பை இடம் மாறாமல் இருப்பதும் , அடிக்கடி நோய் வாய் ப் படாமல் ஆரோக்கியமாக வாழ்வதும் அவர்கள் செய்கின்ற அன்றாட வேலைகள் தான் காரணம். நகரத்திலே வாழ்கின்ற பெண்கள், நாகரிகத்தில் உழலும் பெண்கள் வேலை செய்யாமல் இருப்பது, இவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றதற்கு இதுவே காரணம். உழைப்பில்லா பெண்களுக்குத்தான் எல்லாம் வரு ம . வலிமையான பயிற்சிகளைச் செய்வதும், அதிகப் பயிற் சிகளைச் செய்வதும் நல்லதல்ல. அவ்வாறு செய்வது, யானை தன் தலையிலே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் ஆகிவிடும். ஆகவே, பயிற்சியையும் புரிந்து கொண்டு, பயிற் சிக் கேற்ற மூச்சுவிடும் முறைகளையும் அறிந்து பயன் பெற அழைக்கிறோம். (8) மூச்சு விடும் முறை: சாதாரணமாக, நாம் கைகளை, கால் களை அசைக் கிறோம். உறுப் புக் களைப் பயன்படுத்துகிறோம். இயற் கையாகவே நாம் செய்வதால் இதற்கு 'இயக்கம் (Movement) என்று பெயர். ஏதாவது ஒரு பயன் கருதி, அதையே எண்ணி முழு முச்சாக நமது உடல் உறுப்புக்களை இயக்குகிறோம்.
பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/31
Appearance