48
சிவப்புக் காயும், அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டக் காய்களும் ஒருவர் ஆட்டத் தொடக்கத்தில் அடிக்கும்பொழுது பைக்குள் சென்று விழுந்தால். சிவப்புக் காய் போட்டுவிட்டதாகவே ஏற்றுக்கொள்ளப்படும்
ஆட்டத் தொடக்கத்தைத் தவிர, மற்ற ஆட்ட நேரங் களில், ஒரே ஆடும் வாய்ப்பில் ஒரே அடியில் (Stroke) சிவப்புக் காயும் அவரது ஆட்டக் காயும் பைக்குள் சென்று விழுந்துவிட்டால், அதுவும் சரியென்றே ஏற்றுக்கொள்ளப்
படும்.
சிவப்புக் காயை மட்டும் மற்ற ஆட்ட நேரத்தில் பைக்குள் போட்டு, அதின் தொடர்காயாக தன் உரிமை ஆட்டக்காயைப் போடாவிட்டால், சிவப்புக் காயை மைய சிவப்பு வட்டத்தில் நடுவர் எடுத்து வைக்க, ஆட்டம் அடுத்தவர் ஆடத் தொடங்கிவிடத் தொடரும்.
சிவப்புக் காயைப் போடும்போது, அடிப்பானு கூட பைக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்வது ? எவ்வாறு ஆட்டத்தைத் தொடர்வது என்று இனி காண்போம்.
ஆட்டத் தொடக்கத்தில், ஒருவர் ஆடத் தொடங்கு வதற்காகக் காய்களை அடிக்க, சிவப்புக் காய் மட்டும் பைக்குள் சென்று விழுந்து, அதனுடன் அடிப்பானும் சென்று பைக்குள் விழுந்துவிட்டால், சிவப்புக் காயை எடுத்து, நடுவர் மைய சிவப்பு வட்டத்தினுள் வைக்க. அடிப்பான பைக்குள் போட்ட தவறுக்குத் தண்டனையாக அவரது ஒரு ஆட்டக்காயை எடுத்து எதிராட்டக்காரர் வைக்க, அவர் ஆடும் வாய்ப்பை (Turn) இழக்கிருர் . அடுத்து இருக்கும் எதிராட்டக்காரர் ஆடத் தொடங்குகிருர்,