இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கேரம், பலகை காய்கள்
அளவும், அமைப்பும்
ஆட்டத்தில் மொத்தம் பத்தொன்பது காய்கள் இருக்கின்றன. அவற்றில் வெள்ளேக் காய் ஒன்பதும், கறுப்புக் காய் ஒன்பதும், சிவப்புக் காய் ஒன்று என பத்தொன்பது காய்கள் உண்டு.
முறை ஆட்டத்தை முதலில் தொடங்குவோருக்கு வெள்ளேக் காய்தான் உரிமைக் காயாக இருக்கும்.
அவரை அல்லது அவர்களை எதிர்த்து ஆடுவோருக்குக் கறுப்புக் காயானது உரிமைக் காயாக மாறும்.
சிவப்புக் காய் எந்த முறை ஆட்டத்திலும் இருவருக்கும் பொதுவானது, அதனை எவ்வாறு பயன்படுத்தி, வெற்றி எண்ணைப் பெறுவது என்பதனை ‘சிவப்புக்காய்’ (9-ம்) பகுதியில் விளக்கமாகக் காண்க.
கேரம் - 2