உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21




பிறகு, வெள்ளை, கறுப்பு என்று ஒன்றையொன்று ஒட்டியிருப்பதுபோல, நெருக்கமாக மாறி மாறி இணைத்து வைக்கப்பட வேண்டும்.

அத்துடன், சிறிய சிவப்பு வட்டத்திற்கு அடுத்து சிவப்புக் கோடுகளால் போடப்பட்டிருக்கும் 6⅜ அங்குல விட்டமுள்ள உள் வட்டம் (Inner circle) என்ற சிவப்பு வட்டக் கோட்டிற்குள் எல்லாக் காய்களும் அடங்கி, சமமாக பரப்பப்பட்டிருக்கின்றனவா என்பதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

காய்களை அடுக்குவதற்கென்று அதிக நேரத்தைப் போக்கிவிடக் கூடாது. காய்களை அடுக்கிய பிறகு, ஆட்டப் பலகை மழமழப்பாக இருப்பதற்காக, பவுடர் தேவைப்படுகிறது. அதற்காக ஆட்டப் பலகை முழுவதிலும் பவுடர் பையால் (Pouch) இறைத்துத் தெளித்துக் கொள்ள வேண்டும்.

தனக்கு வேண்டிய பவுடரை, முதலில் ஆடத் தொடங்குகின்றவரே ஆட்டப் பலகையில் அள்ளிப் பரப்பலாம். அள்ளியிட்ட பவுடரை கையினாலோ அல்லது அடிப்பானினாலோ, அல்லது தூரிகை (Brush) மூலமாகவோ தேய்த்துவிட்டு, பலகை முழுதும் பரவச் செய்யலாம்.

ஆட்டத்தைத் தொடங்குவோர் தெளிக்கின்ற பவுடரைக் குறித்துக் காட்டி, அடுத்த ஆட்டக்காரர் குறையாகவோ, எதிர்த்தோ எதுவும் கூறக்கூடாது. கூறவும் முடியாது. அதிகம் என்று துடைத்தெறியவும் கூடாது.

அதிக அளவுப் பவுடர் பலகையில் இருக்கிறதென்றால், அது பற்றி நடுவரிடம் மட்டுமே கூறவேண்டும். அதிகமாகப்