12
அது தவறில்லை. ஆட்ட நேரத்தில் தம்மையும் அறியாமல் மேலே கூறியது போல நடக்குமாதலால், ஆட்டக்காரர்கள் மிகவும் கவனத்துடன் தவறு நடக்காமல் பார்த்து ஆட வேண்டும்.
தனக்கு ஆடுகின்ற ‘ஆடும் வாய்ப்பு’ (Turn) கிடைக்கும் வரை எப்படியேனும் தனது ஆசனத்தில் உட்கார்ந்திருக்கலாம். ஆனால், ஆடும் வாய்ப்பினைப் பெற்று ஆடுவதற்குரிய அடிப்பானைக் (Striker) கையில் எடுத்து விட்டால், தான் அமர்ந்திருக்கும் நிலையிலே நாற்காலியை அங்குமிங்கும் நகர்த்தாமல், அசைக்காமல் ஏற்றாமல் இறக்காமலே ஆட வேண்டும்.
ஆகவே, ஆட்டக்காரர்கள், அமர்ந்தாடுகின்ற நிலையினில் அதிகக் கவனம் செலுத்துவது மிகவும் நன்மை பயப்பதாகும்.
நீண்ட நேரம் உட்கார்து விளையாடக்கூடிய நிலமையும் ஏற்படக்கூடும், எனவே, வசதியான முறையில் ‘இருக்கை’ இருந்தால்தான், விரும்பியவாறெல்லாம் காய்களை அடித்தாட முடியும்.
ஆட்டத்தின் நோக்கமே காய்களே அடித்தாடிப் பலகைப் பையுள் (Packet) இடுவதுதான் என்பதால் தான், அமரும் முறையில் தீவிர கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறோம்.