உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


1. விளையாட்டு

விரும்பி ஆடும் ஆட்டமாக எல்லாமே இருப்பதால்தான், விளையாட்டு என்று நமது முன்னோர்கள் விரும்பி அழைத்திருக்கின்றார்கள்.

விளை என்ற சொல்லுக்கு விருப்பம் என்றும், ஆட்டு என்ற சொல்லுக்கு ஆட்டம் என்றும் பொருள் கூறுவதின் மூலம், விளையாட்டு பொருள் பொதிந்ததாக இருக்கிறது. உடல் உறுப்புக்களை இதமாக, இங்கிதமாக இயக்குவதன் மூலம்,விரும்பத்தகுந்த பயன்களைப் பெற்றுத் தருவதன் மூலம், விளையாட்டு என்றும் உலகில் சிறப்பான புகழைப் பெற்றுத் திகழ்கின்றது.

நிற்றல், நடத்தல், ஓடல், எறிதல், தூக்கல் போன்ற இயற்கையான இயக்கங்களுக்கு மெரு கேற்றியும் உரமேற்றியும், உடல் உறுப்புக்களுக்கு உணர்வு பூர்வமான தரம் ஏற்றியும், திறம் கூட்டி யும், ஒருவித லயத்துடன் பணியாற்றும் பண்பினையும் விளைப்பதால்தான், விளை ஆட்டு என்றும் மாறி யும் மருவியும் வந்தமைந்திருக்கலாம் என்றும் நாம் நம்புதற்கிடமிருக்கிறது.