26
ஆகவே, அந்தப் பெரிய இடைவெளியை மறைக் கும்பொருட்டும், குறைத்து நெருக்கும் பொருட்டும், இடையிலே மூன்ருவது கம்பு ஒன்று பொருத்தப் பட்டது. இவ்வாருக, மூன்று முளைக்கம்புகள் ஊன்றப்பட்டு, விக்கெட்' என்ற பெயருடன், கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கியமானபங்கேற்கத் தொடங்கின.
அதன்பிறகுதான், அதன் உயரம் அகலம் எல்லாம் சீராக்கப்பட்டு, செப்பனிடப்பட்டது. இப்பொழுது இருக்கும் விக்கெட்டின் உயரம் 28 அங்குலம். அகலம் 9 அங்குலம் ஆகும்.
7.ஹாக்கி (Hockey)
வளைந்த கோல் ஒன்றினுல் பந்தினை அடித்தாடு வதால் இதனை நாம் வளைகோல் பந்தாட்டம் என்று அழைக்கிருேம்.
இந்த ஆட்டம் தோன்றிய காலம் என்பது, மனித இனம் உழைப்பிலிருந்து ஒய்வு பெறும் எண்ணம் பெற்று, அந்த ஒய்வினையும் மகிழ்வுடன் கழிக்க விரும்பியகாலம் என்றே நாம் கொள்ளலாம்.
ஒரு கோலின் உதவியால், ஏதாவது ஒரு உருண்டையான பொருளைத் தள்ளி விளையாடும்