உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

முன்னுரை

ளிமை நிறைந்த இந்தியர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் ஆட்டம்; அதே நேரத்தில் வலிமை நிறைந்த வீர வாழ்வின் விளைநிலமாக விளங்கும் வீறுபெற்ற ஆட்டம் என்ற பெருமையையும் அருமையையும் பெற்று விளங்குகிறது சடுகுடு ஆட்டம்.

ஆடம்பர செலவுகளால் ஆட்டிப்படைக்கப்படாத, ஆனால், ஆட வந்திருப்பவர்களுக்கோ ஆனந்தத்தின் எல்லையையும் அளப்பரிய உடல் சுகத்தையும் அளிக்கின்ற அற்புத ஆற்றல் படைத்த ஆட்டமாகவும் சடுகுடு விளங்குகிறது.

சடுகுடு ஆட்டம் என்று தமிழகத்தில் அழைக்கப்பட்டு, பட்டிதொட்டிகளில் வாழ்ந்த மக்களின் மனங்கவர்ந்து விளங்கிய ஆட்டம், இன்று அகில இந்திய அளவில், ‘கபாடி’ என்று பெயர் பெற்றிருக்கிறது.

என்றாலும் இந்த நூலுக்கு ‘சடுகுடு ஆட்டம்’ என்றே தலைப்பினைத் தந்திருக்கிறேன்.

ஆட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அத்தனை பேரும் திகில் நிறைந்த உணர்ச்சிப் பெருக்கின் உச்சகட்டத்தில் திளைப்பது போலவே, வேடிக்கை பார்க்கும் ரசிகர்களும்கூட வீரம் விளையாடும் சூழ்நிலையின் அரவணைப்பிலே மெய்மறந்து பேரின்பம் காணும் பெருமைமிகு நிலையில் வீற்றிருக்க வைத்திருப்பது சடுகுடு ஆட்டத்தின் இனிய இயல்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சடுகுடு_ஆட்டம்.pdf/5&oldid=1040503" இலிருந்து மீள்விக்கப்பட்டது