உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சடுகுடு ஆட்டம்


அதுவும் பிடிப்பவரின் கைகளுக்கு அருகாமையில், அவரது கால்கள் இருந்தால், இரு முழங்கால்களையும் இரு கைகளால் கோர்த்துப் பிடித்துக்கொள்கின்ற முறையைத்தான் இரு முழங்கால் பிடி முறை என்கிறோம்.

இரண்டு கைகளாலும் முழங்கால்கள் இரண்டையும் அழுத்தி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதும், அப்படியே தூக்கிவிட்டால், பிடிபட்டவர் சமநிலையை இழந்து, அப்படியே கீழே விழுந்துவிடுவார். அதற்குப் பிறகு அவர் விடுபட்டுப் போகவே முடியாது. இது மிகவும் கடுமையான ஒரு பிடி முறையாகும்.

உ) தொடைப் பிடி முறை (Thigh Catch)

பாடி வரும் ஆட்டக்காரர் பாடியவாறு வந்து நின்று அல்லது காலை நீட்டி எட்டி உதைத்துத் தொடுவதற்காக ஒரு காலைத் துக்கி விடும்பொழுது, பக்கத்தில் நிற்கும்