உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


போட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது எக்காரணத்தைக் கொண்டும், பந்தாடும் தரைப் பகுதியை மாற்றவே கூடாது. அந்தப் பகுதி விளையாடுவதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது என்று இரு குழுத் தலைவர்களும் ஒத்துக் கொண்டாலொழிய பந்தாடும் தரையை மாற்றி ஆட முடியாது.

25. ஒரு போட்டி ஆட்டத்திற்கு எத்தனை 'முறை ஆட்டம்' (Inning) உண்டு?

2 முறை ஆட்டங்கள் உண்டு. ஒரு 'முறை ஆட்டம்' என்பது ஒரு முறை பந்தெறிந்தாடி (Bowling) ஒரு முறை அடித்தாடி (Batting) விளையாடுவது. அது போல, ஒவ்வொரு குழுவும் இருமுறை ஆடும் வாய்ப்பினைப் பெறுகிறது. அந்த முறையை ஒரு குழு மாற்றி ஒரு குழு {Alternate) என்றுதான் ஆட வேண்டும்.

26. ஒரு முறை ஆட்டத்திற்கும் இன்னொரு முறை ஆட்டத்திற்கும் இடையே உள்ள இடைவேளை நேரம் எவ்வளவு?

10 நிமிடங்கள் உண்டு. அதற்குள் தடுத்தாடியவர்கள், தங்களது தங்கும் இடத்திற்கு வந்து, தங்களை அடித்தாடத் தயார் செய்து கொள்ளவும், அடித்தாடிய குழு, மைதானத்திற்குள் சென்று தடுத்தாடுவதற்குத் தங்களை ஆயத்தமாக்கிக் கொள்ளவும் வேண்டும்

27. நண்பகல் உணவுக்குத் தரப்படுகின்ற இடைவேளை நேரம் எவ்வளவு?

ஏற்கனவே இரு குழுவினரும் பேசி, ஒரு முடிவுக்கு வந்திருந்தாலொழிய, நண்பகல்