பந்தயப் பாதையின் மொத்த அகலம் 7.32 மீட்டர் அல்லது 24 அடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். குறைந்தது 6 'ஒடும் பாதை'களாவது (Lane) இருக்க வேண்டும். ஒவ்வொரு ஒடும் பாதையின் குறைந்த அளவு அகலம் 1, 22 மீட்டர் அல்லது 4 அடிஅதிக அளவு அகலம் 1.25 மீட்டர் அல்லது 4½அடி.
அளவினைக் காட்டும் ஒவ்வொரு கோடும் 5 செமீ அல்லது 2 அங்குலம் அகலமுள்ள சுண்ணாம்புக் கோட்டினால் போடப்பட்டிருக்க வேண்டும்.
ஒட்டப் பந்தயங்களின் தொடக்கமானது எப்பொழுதும் வளைவுப் பகுதியில் இருந்தாலும் (Curve) முடிவடைவதெல்லாம் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் ஒடும் பாதையில்தான் இருக்க வேண்டும். அதுதான் சிறந்த முறையுங்கூட.
ஒட்டங்களின் முடிவிலே உள்ள முடிவெல்லைக் கோட்டின் (Finishing Line) அகலம் 2 அங்குலம் இருக்க வேண்டும். அவ்வாறு அமைந்த கோட்டின் இரண்டு பக்கத்திலும் ஒவ்வொரு அடி தூரத்திற்கு அப்பால் வெள்ளை நிறமுள்ள 4 அடி உயரமுள்ள கம்பங்களை நிறுத்தி வைத்து, அதுதான் போட்டியின் முடிவெல்லைக் கோடு என்பதையும் காட்டவேண்டும்.
ஒட்டப் பந்தயத்தின் துரத்தை அளக்க வேண்டுமானால், ஆரம்பக் கோட்டின் (Starting Line) வெளிப் புற அகலத்தில் இருந்து தொடங்கி, முடிவெல்லைக் கோட்டின் உட்புறம் வரை அளந்தே கணக்கிட வேண்டும்.