உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா [] 29 3. (splb(spoop 35msøTL60 (Hop-Step & Jump) நீளத் தாண்டுதலுக்குரிய செயல் முறைகளே இப்போட்டிக்கும் பெருந்தும் என்றாலும், தாண்டு தற்குரிய துரம் அதிகம் என்பதால், உதைத்தெழும்பும் பலகைக்கும், தாண்டிக் குதிக்கின்ற இடத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை அதிகமாகவே வைத்திருக்க வேண்டும். போட்டியிடுகின்ற வீரர்கள் வேகமாக ஒடி வருகின்ற தரைப்பாகம், சமதரையுள்ள பரப்பளவாக இருப்பது மிகமிக அவசியம். ஒடி வருவதும், ஒரு காலால் தரையை உதைத்துத் தாவி அதே காலால் நின்று, மீண்டும் எகிறிக் குதித்து மறு காலால் நிற்பதும், பிறகு அதே காலால் எழும்பி மணற் பரப்பிலே குதித்து இரு கால்களையும் ஊன்ற வேண்டிய நிலை இருப்பதால், தரையிலே மேடுபள்ளம் இருந்தால் கால் பிசகிக் கொள்ளவும், சமயத்தில் ஆபத்து நிகழ்ந்து விடவும் கூடும். ஆகவே, ஒடி வருகின்ற இடம் குறைந்தது 130 அடியிலிருந்து 147 அடி 6 அங்குலம் வரை சம அளவு தரையாக இருப்பது சாலச் சிறந்தது. தாண்ட உதவும் பலகையின் அகலமும் மற்ற தாண்டும் பரப்பளவு எல்லாம் நீடத் தாண்டலுக்கு உரியனவே யாகும். - தாண்ட உதவும் பலகை தரையோடு தரையாக, குறைந்தது மணற் பரப்பிலிருந்து 25 அடி தூரத்தில் பதிக்கப்பெறுதல் வேண்டும்.