28 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி? லிருந்து அதிகமான நீளம் 13 1% அகலமும், கனம் 2 கிலோ கிராம் அதாவது 4 பவுண்டு 6% அவுன்சு உள்ளதாகவும் இருக்க வேண்டும். குறுக்குக் குச்சியைத் தாங்குகின்ற இரு கம்பங்களை நிறுத்தி வைக்கின்ற இடைப்பட்ட துரத்தின் குறைந்த அளவு 12 அடியிலிருந்து 13.2%’ வரை இருக்கலாம். தாண்ட ஒடிவரும் தரைப் பகுதியும், அதைச் சுற்றியுள்ள பகுதியின் தரையும் சம அளவாக இருத்தல் வேண்டும் தாண்டிக் குதிக்கின்ற இடமும், முதலில் ஆழமாக வெட்டப்பட்டு, அக் குழியிலே மணலைப் பரப்பி, மெத்தை போன்ற அமைப்பிலே வைத்திருக்க வேண்டும். குறுக்குக் குச்சியை ஏந்திக்கொண்டிருக்கும் “தாங்கிகள் தட்டையாகவும் 1% அகலமும், 2%” நீளமும் உள்ளனவாகவும், இரு கம்பங்களுக்கு எதிரெதிராக குறுக்குக் குச்சி அவைகள்போல் இருக்கும்பொழுது இரு கம்பங்களையும் தொடாத நிலையில், போட்டியில் குதிக்கின்றவர் அதைத் தொட்டவுடன் முன்புறமோ பின்புறமோ கீழே விழுகின்ற தன்மையில் குறுக்குக் குச்சி இடம் பெற்றிருக்க வேண்டும்.
தொடாத நிலை என்பதற்கு, குறுக்குக் குச்சிக்கும் நிற்கும் கம்பத்திற்கும் உள்ள இடைவெளி தூரம் % அங்குலம் இருக்க வேண்டும்.