உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 117

இருக்கின்றன என்றால் , கண்ணின் துல் லிய அமைப்பைப் பார்த்தீர்களா?

வெளியுலகப் பொருட்களைப் பார்க்க மட்டும் கண்கள் பயன்படவில்லை. வெளியுலகச் செய்தி களையும் விழிப் புடன் தருவதும் தான். கண்கள் மூளைக் கு விவரங்களை அனுப்புகிற அங்கமாக இருக்காமல், வெளிப்புறத்தில் நிகழ்பவகைளுக்குத் தொடர்பு கொள்கின்ற மூளையின் ஒரு பகுதியாகவே செயல்படுகின்றது.

கண்ணோட்டம் கொள்வது தானே கண்ட துன்பங்களுக்கெல்லாம் தேரோட்டமும் நீரோட்டமும் ஆக அமைந்து விடுகிறது.

4. வாய் : வாய் என்றதும் நமக்கு நாக்குதான், நினைவுக்கு வருகிறது. வாய் க் குப் பெருமை சொல்லும் சுவையும் தான்.

அன்பான, பண்பான சொற்கள் வாழ்வு தரும். அகங்காரச் சொற்கள் அழிவைத் தரும். அதுபோல, சுவைக்கின்ற நாக்குத் தன்மையானது, சுகமும் தரும், சோகமும் தரும்.

மேல் நாட் டிலே, இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு என்று நான்கு சுவைகளைக் கூறுவர். தமிழ் நாட் டிலே ஆறு சுவையினைக் கூறுவர். அவை, தித்தித்தல், கூர்த்தல் , துவர்த்தல், கார்த்தல், கைத்தல், புளித்தல். இதை வைத்துத்தான், அறுசுவை விருந்து என சமைத்தும் படைத்தும் மகிழ்ந்தார்கள்.

ஒருவர் நாக்கிலே 9000 சுவை அரும்புகள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித் திருக்கின்றனர். இப் படி, நாவின் சுவைக் கு