22
கிரிக்கெட் ஆட்டமானது, முழுதாகப் பிறக் வில்லை. கி.பி. 13ம் நூற்ருண்டு காலத்தில், கிளப் பால் (Club Ball) என்ற ஆட்டத்திலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக மாறி கிரிக்கெட் மலர்ந்திருக்கலாம் என்பதும் ஒரு கருத்தாக உலவுகிறது.
'கேட் அண்ட்டாக் (Cat and Dough),கேண்ட் இன் அல்லது கேண்ட் அவுட்' (Kandyn or Hand out) போன்ற ஆட்டங்கள் கிரிக்கெட் ஆட்டம் தோன்று வதற்கு முன்னேடி ஆட்டங்களாக இருந்திருக்கலாம் என்பாரும் உண்டு. இங்கிலாந்தில் உள்ள வீல்டு என்ற கிராமத்தி லிருந்துதான் அவ்வூர் சிறுவர்கள் விருப்புடன் ஆடிய திலிருந்து வளர்ந்து, மலர்ந்து, மறுமலர்ச்சியுற்றிருக் கலாம் என்ற ஒர் கருத்தும் தொடர்கிறது.
ஒரு ஆராய்ச்சி நிபுணர், கிரிசி (Crice or Cryce) எனும் பழைய ஆங்கிலச் சொல்லிலிருந்து கிரிக் கெட்' என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறு கிருர். கிரிசி என்ற சொல்லுக்கு குச்சி அல்லது தடி (Staff or Stick) என்று அர்த்தமுண்டு. இந்த கிரி: என்பதாகக் கூறப்படும் தடியானது, லான் பவுலிங் என்ற ஆட்டத்தில், தூரத்தின் அளவினை அளந்து குறிப்பதற்காகப் பயன்படும் தடியாக இருப்பதற் குரிய பெயர் என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக் கிறது.
1611 ம் ஆண்டு, காட்கிரேவ் என்ற அகராதி ஒன்றில், கிராசி (Crosse) என்ற பிரெஞ்சுச்