பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ସ୍ନିଧ୍ଯ 115 - குறிப்பு: இவ்வாறு ஆடும்போது பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். பந்தடி ஆட்டக்காரர் தள ஒட்டக்காரராக மாறுகின்றார். வேறு தளங்களில் உள்ள தள ஓட்டக்காரர்கள் மற்ற தளங்களுக்கு மாறி ஒடலாம். ஆனால் தளங்களுக்கு இடையில் அவர்கள் தொடப் பட்டால் ஆட்டமிழப்பார்கள். 2. பந்தைத் தொட்டாடும் போது மூன்றாவது அடி’ தவறானதாகிவிட்டால் (Foul) பந்தடிக்காரர் ஆட்டமிழக்கிறார். தள ஒட்டக்காரர்கள் தளத்திற்காக முன்னேறிச் செல்ல முடியாது. 18. கீழ்க்காணும் சூழ்நிலைகளில் ஒரு பந்தடி ஆட்டக் காரர் ஆட்டமிழந்துவிடுகிறார் (Batter is out) 1. மூன்றாவது அடியில் பந்தை பிடிப்பவர் பிடித்துவிட்டால். 2. ஏற்கெனவே இரண்டுக்கும் குறைவாக ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருக்கும் போது, பந்தடி ஆட்டக்காரர் மூன்றாவது அடி முடிந்து முதல் தளம் நோக்கி ஒட வேண்டிய சூழ்நிலையில், எல்லா தளங்களிலும் ஒட்டக்காரர்கள் நின்று கொண்டிருந்தால். 3. மூன்றாவது அடி அடிக்கும்போது, அது அடியாகக் கருதப்படும் பொழுது அடி தவறிப்போய் பந்தானது பந்தடிக்காரர் உடலின் ஏதாவது ஒரு பகுதியைத் தொட்டுவிட்டால். 4. இரண்டாவது அடி முடிந்து, பந்தைத் தொட்டாட சிேயலும்போது, அது தவறாகிவிட்டால்.