பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

-

19. நாடகத்தின் உச்சக்கட்டம்

புத்தகங்களை விற்பதற்குத் தெரிந்தால்தான், புத்தகங்களை பதிப்பிக்க முடியும். புத்தகங்களைப் பதிப்பிக்க, கையிலே பணம் இருந்தால்தான், புத்தகங்கள் எழுத முடியும்.

புத்தகம் எழுதுகிற புத்திசாலித்தனத்தைவிட, பத்து பேர்களிடம் அணுகவும், அவர்களை அனுசரித்துப் போகவும், வேண்டிய உதவிகளைச் செய்து, நல்ல பெயர் வாங்கிக் கொள்ளுகிற ஒரு மாதிரி’ குணாதிசயம் கட்டாயமாகத் தேவைப்பட்டது. இது தான் எனக்கு முதலில் தேவைப்பட்ட தகுதியும் திறமையும்.

இந்தக் கட்டாயத்தால்தான், புத்தகங்கள் எழுதி வெளியிட முனைந்தபோது, நம்பியின் நட்பு கிடைத்தது.

நம்பியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக, நம்பி, எழுதிய, ஒன்றுக்கும் உதவாத கதை ஒன்றை, நாடகமாக எழுதி, ‘காத்திருந்த கரங்கள்’ என்ற பெயரில் அரங்கேற்றித் தந்தேன். அதற்குள் ஆயிரமாயிரம் குழப்பம், பணத்தகராறு.

எப்படியோ! நன்றிக் கடன் என்று நாடகத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்தேன். நாடகம் நடந்தபோது, கிளைமாக்ஸ் என்பார்களே, அது நாடகத்தில் நடக்காமல், என் வாழ்க்கையிலே வந்து நடந்ததுதான், விதி நடத்திய நம்பர் ஒன் -