வாழ்க்கை வரலாறு
7
பையும் பெற்றுள்ள நேரு தான் காங்கிரஸின் ஒற்றுமையையும் மாண்பையும் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் நிலைத்துவிட்டது. அதனாலேயே அவர் மீண்டும் மீண்டும் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
காற்றடிக்கும் வேளையிலே கனி பறித்து அனுபவிக்கத் தோன்றிய சந்தர்ப்பத் தலைவர் அல்ல நேரு. தேர்தல் காலங்களில் சட்டை மாற்றிக் கொண்டு பட்டம் காட்டிப் பதவி பிடிக்க வரும் பண்பினர் பரம்பரையில் வந்தவர் அல்லர் அவர் களத்திலே குதிக்காமல் முற்றத்தில் அமர்ந்து போதனைகள் புரிந்துவிட்டு, உரிமை கைக்கு வந்ததும் பொறுப்பான ஸ்தானங்களில் ஒட்டிக்கொள்ள ஓடிவரும் வழி காட்டிகளின் வகையைச் சேர்ந்தவர் அல்லர் அவர். மக்களைத் தூண்டிவிட்டுத் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து பதுங்கிப் பின், தலைகாட்டிப் பெரும் பேச்சுப் பேசுகின்ற வீரர்களின் வழிவந்தவர் அல்லர் அவர்.
வீரம் அவரது உடன்பிறப்பு. தியாகமும் திறமைகளும் அவர் குலத்தின் சிறப்புகள். ஆளும் ஆற்றல் பெற்ற தலைவரின் மகனாய் நாடாளப் பிறந்தவர் பண்டித நேரு, மன்னர்கள் போல் வாழ வேண்டிய தந்தையும் மகனும், மக்களின் நலனுக்காக, நாட்டின் உயர்வுக்காக, கொடிய இன்னல்கள் அனைத்தையும் தாங்கிச் சகித்து வந்தது அவர்களது உயர்வை மட்டும் காட்டவில்லை, நாடு செய்த பாக்கியம் என்றும் உணர்த்துகின்றது.
பண்டித நேருவின் குடும்ப சரித்திரம் தன்னேரில்லாக் காவியம். ஜவஹரின் வரலாறு ஈடு இணையற்று