வாழ்க்கை வரலாறு
15
பெரும் பேச்சுக்கள் பேசுவது தவிர வேறெதுவும் செய்வதில்லை என்றெல்லாம் நம்பி வாழ்ந்தார் அவர்.
செல்வத்தைச் சேர்த்து வைப்பது என்பது தன்னுடைய சம்பாதிக்கும் திறமையையே அவமரியாதைப் படுத்துகிறகாரியம் ஆகும்; எக்காலத்திலும் தனது தேவைக்கு ஏற்பச் சம்பாதிக்கும் சக்தி தன்னிடம் இருக்கிற போது எதற்காகப் பணத்தை மிச்சப்படுத்தி வைக்க வேண்டும் என்பது மோதிலாலின் கொள்கைகளில் ஒன்று. ஆகவே அவரும் அவர் குடும்பத்தினரும் ராஜரீகமான வாழ்க்கை நடத்திவந்தனர். இவ்விதச் சூழ்நிலையில்தான் ஜவஹர்லால் நேருவின் குழந்தைப்பருவம் கழிந்தது.
"பாதுகாப்பு நிறைந்தது: விசேஷ நிகழ்ச்சிகளுக்கு இடமற்றது” என்று தன் குழந்தைப் பிராயம்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் நேரு.
“செல்வம் மிகுந்த பெற்றோர்களால் வளர்க்கப் படுகிற ’ஒற்றைக்கு ஒரு மகன்” கெட்டுக் குட்டிச்சுவராவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. இந்தியாவில் இது சகஜம். அதிலும் பதினோரு வயது வரை குடும்பத்தின் தனி மகனாக வாழ நேர்ந்து விடுகிற சிறுவன் இந்த விபத்திலிருந்து தப்பி வளர்வது என்பது அரிய விஷயம் தான். எனது சகோதரிகள் இருவரும் என்னை விட எவ்வளவோ இளையவர்கள், எங்களுக்கிடையே உள்ள வயது வித்தியாசம் மிக அதிகமானதே. ஆகையினால் என் சிறுபிராயத்தில் என்னோடு ஒத்த தோழர்கள் எவருமின்றித் தன்னங் தனியனாகவே நான் வளர நேர்ந்தது. ஆரம்பப் பள்ளிக்கூடம் எதற்கும் என்ன எம் பெற்றோர்கள்