22
நம் நேரு
வருகிறது, அது ஏன் அடிக்கடி வரக் கூடாது?’ என்கிற வருத்தம் தான் அது. “அடிக்கடி பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று நான் புரட்சி கூடச் செய்தேன். முதிர்கின்ற வயதை நினைவுபடுத்தும் கசப்பான சின்னங்களே கொண்டாட்டங்கள் என்பதை அன்று நான் உணர்ந்தேனில்லை” என்று நேரு பின்னாட்களில் எழுதிவைத்திருக்கிறார்.
நேருவின் பத்தாவது வயதில் தான் அவர் குடும்பத்தினர் ‘ஆனந்த பவனம்’ எனும் பெரிய மாளிகையில் வாசம் செய்யத் தொடங்கினர்களாம். பவனத்தைச் சுற்றிப் பெரிய தோட்டமும், தோட்டத்தில் ஓர் குளமும் இருந்தன. அவற்றை ஆராய்வதிலும், அங்கு கட்டப் பெற்ற புதிய வீடுகளையும் வேலை செய்யும் தொழிலாளர்களையும் வேடிக்கை பார்ப்பதிலும் களிப்பெய்தினார் நேரு. நீச்சல் குளத்தில் நீராடுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததாம். கோடை காலத்தில் ஒரே நாளில் பல தடவைகளில் குளித்து மகிழ்வதிலேயே பொழுதைப் போக்கி விடுவாராம் அவர்.நீச்சல் குளம் ஒரு புதுமையாக விளங்கியது. அத்துடன் அலகாபாத்திலேயே முதன் முதலாக ஆனந்த பவனத்தில் தான் எலெக்ட்ரிக் விளக்குகள் மின்னத் தொடங்கின. ஆகவே அம்மாளிகையில் எப்பொழுதும் நண்பர்கள் கூடுவதும், குளத்தில் நீந்துவதும் பொழுது போக்குவதும் அதிகமாக இருந்தது. அனைத்தும் நேருவுக்கு உற்சாகம் அளிக்கும் சூழ்நிலையாகவே திகழ்ந்தது.
எனினும் நேருவின் இதய ஆழத்தில் ஓர் ஏக்கம் பதுங்கிக் கிடக்காமல் இல்லை. ஊரில் உள்ள சிறுவர்